தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுடி செய்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இழப்பீடு அதிகரிக்கக் கோரிய மனு மீது தமிழக அரசு மற்றும் விஜய் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு உள்ளிட்ட 7 பொதுநல மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. 7 பொது நல மனுக்களையும் நீதிபதிகள் தண்டபானி மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தனர்.

அப்போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், கழிவறை, மருத்துவம் ஆம்புலன்ஸ் வசதியை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், பொதுக்கூட்டங்களில் வெளியே செல்லும் வழி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமையே என கூறிய நீதிபதிகள், யார் மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என தெரிவித்தனர். எந்த கட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றி பொதுமக்களின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்தனர்.

மேலும், இழப்பீடு அதிகரிக்கக் கோரிய மனு மீது தமிழக அரசு மற்றும் விஜய் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Night
Day