தனிநபருக்குச் சொந்தமான நிலத்தில் அரசின் நீச்சல் குளம்

எழுத்தின் அளவு: அ+ அ-

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் பகுதியில் தனிநபருக்கு சொந்தமான 11 கிரவுண்டு நிலத்தை ஆக்கிரமித்து விளம்பர திமுக அரசு விளையாட்டு அரங்கத்தை திறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி கே எம் காலனி பிரதான சாலையில் உள்ள 11 கிரவுண்டு காலி நிலம் சின்னம்மாள் என்பவரது வாரிசுகளின் பெயரில் உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வழக்கு தொடரப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இந்த 11 கிரவுண்ட் நிலம் பயன்படுத்தாமல் காலியாக இருந்ததால், ஆட்சிக்கு வந்த திமுக அரசு, காலியிடங்களை கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில், அந்த இடத்தை ஆக்கிரமித்து, தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை கட்டி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலத்துக்கு பட்டா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளதாகவும், வழக்கு விசாரணை முடிவடைவதற்குள் அவசரகதியில் இந்த இடத்தை ஆக்கிரமித்த இந்த விடியா அரசு நீச்சல் குளத்துடன் கூடிய விளையாட்டு அரங்கத்தை கட்டியதுடன், அதனை முதலமைச்சரே திறந்து வைத்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு உரிய இழப்பீடு தருவதாக கூறிவிட்டு, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிலத்திற்கான முழு தொகையை விளம்பர திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் ஆக்கிரமித்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 



Night
Day