தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோனூர் புதுத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது கர்ப்பிணி மனைவியை பிரசவத்துக்காக தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிறுது நேரத்தில் குழந்தைக்கு மூச்சு தினறல் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மேலும் குழந்தையை உறவினர்களிடம் காட்டாமல் இருந்த மருத்துவர்கள், இன்று மதியம் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் கவனக்குறைவால், குழந்தை தவறி விழுந்து உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...