தஞ்சாவூர் பட்டாசு குடோனில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்பாதி பகுதியில் குடோனில் அனுமதியின்றி நாட்டு வெடி மருத்து தயாரித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடோனில் காலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உடனே அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, 2 பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டனர். அப்போது உயிரிந்தது சுந்தர்ராசு, ரியாஸ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day