தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு ஒரே நாளில் 3 ஆயிரத்து 5 ரூபாய் அதிகரித்து 1 லட்சத்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு 3 ரூபாய் 5 காசுகள் அதிகரித்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களில் தங்கம் சவரனுக்கு 2 ஆயிரத்து 120 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 14 ஆயிரத்து 500 ரூபாயும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day