தங்கம் ஒரு சவரன் ஒரே நாளில் ரூ.840 அதிகரித்து ரூ.52,920-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் 840 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 920 ரூபாய்க்கும்,  கிராமுக்கு 105 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 615 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராம் 2 ரூபாய் உயர்ந்து 87 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day