டாஸ்மாக் DGM-மிடம் ED விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், டாஸ்மாக் அதிகாரிகள் வீடு, மதுபான தயாரிப்பு ஆலைகள் உள்பட 20 இடங்களில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில், கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 நாட்கள் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாகனிடம் அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் டாஸ்மாக் மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர்களான கேசவன்,  தேவகுமார், பாபு, இந்திரஜித் ஆகியோரது வீடுகளும் அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கியது.

திமுக முக்கிய புள்ளி ஒருவருக்கு நெருக்கமானவரான பட்டினப்பாக்கம் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ரத்தீஸ் பெயரும் இந்த சோதனை பட்டியலில் இடம் பெற்றது. ரத்தீஸ் தலைமைறவானதாக கூறப்படும் நிலையில், அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்நிலையில், டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கதுறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இந்த் விசாரணை நடைபெற்றுவருகிறது. 

Night
Day