சென்னை மாமன்றக் கூட்டத்தில் அறிக்கையை கிழித்தெறிந்த பாஜக கவுன்சிலர்

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளிகளில் சாதிய பாகுபாடு களைவது குறித்த நீதிபதி சந்துரு அறிக்கையை, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் மாமன்றத்தில் கிழித்து வீசி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயம் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது இதில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளிகளில் சாதிய பாகுபாடு களைவது குறித்த நீதிபதி சந்துரு அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த அறிக்கையை மாமன்ற கூட்டத்தில் கிழித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறினார். இதனால், கூட்டத்தில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

Night
Day