சின்னம்மாவின் மனிதநேயத்தால் உயிர் பிழைத்த கணேசன், குடும்பத்தினர், சின்னம்மாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சாலையில் மயங்கி கிடந்தவரை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தற்போது அவர் உடல் நலம் தேறினார். உயிர் பிழைத்த அவர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களை கடந்த 20ம் தேதி, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுக்‍கு அளிக்‍கப்படும் சிகிச்சை மற்றும் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து விட்டு, புரட்சித்தாய் சின்னம்மா அங்கிருந்து புறப்பட்டபோது, கண் எதிரே சாலையில் நடந்து வந்த மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கணேசன், திடீரென மயங்கி விழுந்தார். சாலையில் மயங்கிக் கிடந்தவரை மீட்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையினரை சம்பவ இடத்திலேயே எச்சரித்த புரட்சித்தாய் சின்னம்மா, மருத்துவமனை தரப்பில் ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்ததால், உடனடியாக ஆட்டோ ஒன்றை பிடித்து அவரை மருத்துவமனைக்‍கு அனுப்புமாறு தொண்டர்களை அறிவுறுத்தினார். புரட்சித்தாய் சின்னம்மா ஆணைக்கிணங்க தொண்டர்கள் உடனடியாக மயங்கி கிடந்தவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்று வலியால் துடித்து மயங்கி விழுந்த அவருக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின் கணேசன் தற்போது நலமுடன் உள்ளார். புரட்சித்தாய் சின்னம்மாவின் மனிதநேயத்தால் உயிர் பிழைத்த கணேசன், சின்னம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். உரிய நேரத்தில் புரட்சித்தாய் சின்னம்மா, முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாலேயே கணேசன் உயிர்பிழைக்க முடிந்ததாக உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Night
Day