சென்னையில் 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை தாம்பரம், ராயப்பேட்டை, மண்ணடி, ஜாம் பஜார் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள்சேர்ப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சோதனைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 30ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பு தொடர்பாக என்.ஐ.ஏ சோதனையில் ஈடுபட்டது. இந்த அமைப்பு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது என்றும், சர்வதேச அளவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஏழுகிணறு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தாம்பரம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

varient
Night
Day