சென்னையில் ஹைட்ரஜன் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடைபெற்ற ஆயிரத்து 200 குதிரை திறன் கொண்ட ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்திருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ஆலையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்திருப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜன் ரயில்கள் இருக்கும் என்றும் ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இந்தியாவை முன்னணி நாடுகள் வரிசையில் சேர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

Night
Day