எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுபிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த மருத்துவர் ராஜா, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தியும் மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில், வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்ற மருத்துவர் ராஜா, பணி முடிந்து திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 158 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.