சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அசோக் நகர் 16வது அவென்யூவில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். காலை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மின்னஞ்சலைப் பார்த்த பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற கே.கே.நகர் காவல் நிலைய போலீசாரும் வெடிகுண்டு செயல் தடுப்பு நிபுணர்களும் பள்ளியில் தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை ஒருவரைக் கூட காவல்துறை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day