சாலை அமைத்து 24 மணி நேரத்தில் பள்ளம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மேற்கு சைதாபேட்டையில் சாலை அமைத்த 24 மணி நேரத்தில் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜோன்ஸ் சாலையில் புதன் கிழமை இரவு புதிதாக சாலை போட்ட நிலையில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அப்பகுதி மக்கள் ஜோன்ஸ் சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு வருவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். பள்ளம் ஏற்பட்டு ஒருநாள் கடந்தும் இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று குற்றம்சாட்டிய மக்கள், விளம்பர திமுக ஆட்சியில் பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டு  விளம்பரம் செய்வது மட்டுமே நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினர். 

Night
Day