கிருஷ்ணாவுடன் தொடர்பு - 10 பேருக்கு சம்மன் அனுப்ப முடிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கிருஷ்ணா, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப் பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவரின் செல்போனில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் சிக்கினார். 

கெவின் என்பவரிடமிருந்து நடிகர் கிருஷ்ணா, போதைப் பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர் என்றும் அதை  நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கிறார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் உட்கொள்பவருடன் வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து அது சம்பந்தமாக கருத்து பரிமாற்றங்களில், போதைப் பொருள் உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கைதான நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோரை வரும் 10ம் தேதி வரை காவலில் வைக்க எழும்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ஜாமின் கோரி நடிகர் கிருஷ்ணா மனுத்தாக்கல் செய்துள்ளார். தான் போதைப் பொருள் உட்கொள்ளாதது உறுதியான பிறகும் கைது செய்யப்பட்டுள்ளதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நடிகர் கிருஷ்ணாவுடன் வாட்ஸ்ஆப் குழுவில் இருந்த 10 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக அவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Night
Day