சென்னையில் இருந்து ஃபிராங்க் ஃபர்ட்-க்கு இயக்கப்படும் விமானம் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, சென்னையில் இருந்து ஃபிராங்க் ஃபர்ட் செல்ல வேண்டிய விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது.

ஜெர்மனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னைக்கு தினமும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தபோது, விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மீண்டும் ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் இருந்து அதிகாலை 1.50 மணிக்கு ஃபிராங்க் ஃபர்ட் புறப்பட வேண்டிய லுப்தான்ஷா விமானம் ரத்து செய்யப்பட்டது. 

varient
Night
Day