சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில்  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

varient
Night
Day