சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு - நாளை விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கார் பந்தயம் நடத்தப்படும் போது அண்ணா சாலை, நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கார் பந்தயம் நடத்துவது மோட்டார் வாகன விதிகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

varient
Night
Day