சின்னம்மா கருத்துக்கு வலுசேர்க்கும் செங்கோட்டையன்

எழுத்தின் அளவு: அ+ அ-

 அஇஅதிமுகவில் இருந்து வெளியேறிவர்கள் உடனடியாக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையில் தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை இ.பி.எஸ் புறக்கணித்துவிட்டதாகவும் செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். அதிமுக ஒருங்கிணைப்பட வேண்டும் என அதிமுகவின் 6 மூத்த தலைவர்களின் கருத்தை ஏற்கும் மனநிலையில் இ.பி.எஸ் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறப்போம் மன்னிப்போம் என்ற முறையில் அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என்றும், அந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தாங்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைப்போம் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்த நடவடிக்கையை 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்றும் செங்கோட்டையன் கெடுவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும் என்றும் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Night
Day