சிகிச்சை பெறுபவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்த இடத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்தனர். இந்த துயர சம்வத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு துயர சம்பவம் நிகழ்ந்த இடத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பிரசார கூட்டத்தில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

Night
Day