நீதிபதியிடம் தவெக முறையீடு : இன்று விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் தவெக மனு மீது உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று பிற்பகல் விசாரணை நடைபெறுகிறது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ள நிலையில், உயர் நீதி​மன்​றத்​துக்கு தற்​போது தசரா விடு​முறை என்​ப​தால், விடு​முறைக்கால நீதிப​தி​யான தண்​ட​பாணியை சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தவெக வழக்​கறிஞர் அணி​யினர் நேற்று சந்​தித்​தனர். 

அப்​போது, கரூரில் நடை​பெற்ற பிர​சார கூட்​டத்​தில் நெரிசல் ஏற்பட்ட சம்பவம் விபத்​து​போல தெரிய​வில்​லை என்றும் திட்​ட​மிட்ட சதி​போலவே தெரிவதாகவும் அவர்கள் முறையிட்டனர். பிரசா​ரம் நடந்​து ​கொண்டு இருந்​த ​போது, திடீரென எங்கிருந்தோ கற்​கள் வீசப்​பட்​டது என்றும் போலீ​சார் தடியடி நடத்​தியதாகவும் நீதிபதியிடம் தெரிவித்த தவெகவினர், இதுதொடர்​பாக சிபிஐ அல்​லது சிறப்பு புல​னாய்வு குழு​வைக் கொண்டு உரிய முறை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று கோரிக்கை விடுத்தனர். கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை பாது​காக்க உத்​தர​விட வேண்டும் என்றும், நடந்த சம்​பவம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்த வேண்​டும் என்றும் அவர்​கள் முறை​யிட்​டனர்.

இதை கேட்ட நீதிபதி தண்​ட​பாணி, சம்​பவம் நடந்த இடமான கரூர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு எல்​லைக்​குள் இருப்​ப​தால் இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில்​தான் மனுத்தாக்கல் செய்ய வேண்​டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தவெகவினர் தாக்கல் செய்த மனு மீது திங்களன்று பிற்​பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறும் என்றும் கூறினார். அதனடிப்படையில் தவெக சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் இன்று காலை மனுத்தாக்​கல் செய்யப்பட்டது. இதையடுத்து தசரா விடு​முறைக் கால சிறப்பு அமர்​வில் மனு இன்று மதி​யம் விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படு​கிறது.

varient
Night
Day