சாலையோரம் நின்ற டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம் விபத்தில் 2 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலையோர பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியானது.

போளூர் சாலையில் வழியாக இருசக்கர வாகனத்தில் விஜி, பூமிநாதன் என்வர்கள் நீதிமன்ற வழக்கில் ஆஜராக சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோர பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த விஜி, பூமிநாதனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day