சாலையை அகலப்படுத்தக்கோரி மக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம், வளையங்குளம் அருகே  சாலையை அகலப்படுத்தக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 38 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும், மேம்பாலத்திற்கு கீழ் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்படவுள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Night
Day