எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர் அனல் மின் திட்ட கட்டுமான பணியின் போது, சாரம் சரிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்ததற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர் அனல் மின் திட்டத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சாரம் சரிந்து விழுந்ததில் வடமாநிலத்தை சேர்ந்த 9 நபர்கள் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கட்டுமானப்பணியில் உயிரிழந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் 9 நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சக தொழிலாளர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாகவும், அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.