ஆயுத பூஜை : சென்னை கோயம்பேடு சந்தையில் அலைமோதிய கூட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பூஜை பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

நாடு முழுவதும் நவராத்தி பண்டிகை களைகட்டியுள்ளது. இதையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்துவர். நவராத்திரி பண்டிகையின் 9 வது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையாக கொண்டாடுவார்கள். இதையொட்டி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரஸ்வதி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

Night
Day