சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் படுகொலைகள் நடக்காத நாட்களே இல்லை எனும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, இன்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் தங்களின் இல்லங்களில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுசீரமைப்பு எனும் கற்பனையான ஒன்றை முன்வைத்து, திமுக அரசு கற்பனைக்காக நாடகம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் படுகொலைகள் நடக்காத நாட்களே இல்லை எனும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

Night
Day