கோவை: தனியார் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் அமோனியா கேஸ் கசிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் சிக்காரம்பாளையம் தனியார் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பராமரிப்பு பணியின்போது அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டது. காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது புதிய உரிமையாளர் தொழிற்சாலையை வாங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே ஊழியர்கள் பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்தபோது அமோனியா கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதனால் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்த மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பரவலை கட்டுப்படுத்தினர்.

Night
Day