தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
கும்பகோணம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏராகாரம் ஊராட்சி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதன்மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நீர்த்தேக்கத்தொட்டி சரிவர பராமரிக்கப்படாததால், தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதுடன், ஒரு சில பகுதிகளில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. நீர்த்தேக்கதொட்டி எந்நேரமும் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதிகாரிகள் அமைத்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...