குண்டுவெடிப்பில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் 1998ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை 28 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். 

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அப்போதைய பாஜக தலைவரான அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல்உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டைலர் ராஜா என்கிற சாதிக் ராஜா என்பவர் கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். தற்போது அவரை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட டைலர் ராஜாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வரவுள்ளனர். எனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day