கீழ்மயிலம் அருந்ததியர் காலனி மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கீழ்மயிலம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அருந்ததியர் காலனி மக்களை கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். ​தொடர்ந்து அப்பகுதி மக்‍களுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா, அரிசி, சேலை, வேட்டி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

புயலால் தாங்கள் அதிகம் பாதிக்‍கப்பட்ட போதிலும், ஆளும் திமுகவினரோ, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலரோ இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை என்றும், எந்தவித நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தங்களது ஆதங்கத்தை அப்பகுதி பெண்கள் வெளிப்படுத்தினர். 

Night
Day