கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின்தடை - நோயாளிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் 7 மாடி கட்டிடத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த மின் ஊழியர்கள் மின் தடையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3மணி நேரத்திற்கு பிறகு பழுதுகள் சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கபட்டது. கட்டுமான பணியின்போது மின் வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
 

Night
Day