100 கவுன்சிலர்களில் 77 கவுன்சிலர்கள் ஆப்சென்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக  மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை  திமுக மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 39வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. 100 மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க கூடிய நிலையில், 23 மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது. மாமன்ற கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பங்கேற்காத காரணத்தால் 46 தீர்மானங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், மதுரை உத்தங்குடியில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெறும் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக கவுன்சிலர்கள் சென்றதால் மாமன்ற கூட்ட்த்தில் பங்கேற்வில்லை என கூறப்படுகிறது. பெரும்பான்மையான மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் காலி இருக்கைகளோடு மாமன்ற கூட்டம் நடைபெற்றது.   

Night
Day