எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண்களை காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கனகம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சிவாஜி என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தனம், மதுமிதா, செவ்வந்தி ஆகிய மூன்று பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது, அங்கு மதுபோதையில் பணியில் இருந்த காவலர் ராமர் என்பவர், மூன்று பெண்களையும், ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 5 மாத கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர் தரப்புடன் சேர்ந்து கொண்டு காவலர் பெண்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள், காவலர் ராமன் மற்றும் பேக்கிரி உரிமையாளர் சிவாஜி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். விளம்பர திமுக ஆட்சியில் வேலியே பயிரை மேய்ந்த கதை போல், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரை, அப்பாவி பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.