காப்புரிமை வழக்கு - இளையராஜா மனு தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

காப்புரிமை விவகாரத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இளையராஜாவின்  IMMP நிறுவனத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், ஒலிப்பதிவுகளில் சோனி நிறுவனத்தின் பதிப்புரிமையை IMMP மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

Night
Day