காஞ்சிபுரம்: தீ விபத்தில் வாழ்வாதாரத்தை இழந்த தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே தீ விபத்தில் வாழ்வாதாரத்தை இழந்த தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகனுக்கு போலீசார் உதவி கரம் நீட்டியுள்ளனர். கரசங்கால் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த செல்வி மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகன் சதீஷ், கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், திடீரென குடிசை வீடு பற்றி எரிந்து வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. இதுதொடர்பாக மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரின் மகனுக்கு உதவுமாறு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதன்படி மணிமங்கலம் போலீசார் தேவையான பொருட்களை அளித்து மேற்கூறையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பதாக கூறினர். 

varient
Night
Day