காஞ்சிபுரம்: தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  கெங்கை அம்மன் கோவில் தெரு பின்புறம் மின் கம்பங்களில் உள்ள மின்சார ஒயர்கள் கையால் எட்டி பிடிக்கும் தூரத்தில்  தாழ்வாக தொங்கிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Night
Day