12 வகையான ஆவணங்களில் இருந்து ஏதேனும் ஒன்றினை வைத்து வாக்கு செலுத்தலாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நாளை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். 

Roll Vis GFX (50/50)

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தால் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். அரசால் அங்கீகரிக்கப்பட்ட 12 வகையான ஆவணங்களில் இருந்து ஏதேனும் ஒன்றினை வைத்து வாக்காளர்கள் வாக்கு செலுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

85 வயதுக்கு மேலான மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவசமாக சென்று வாக்களிக்கலாம் என்றும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக வீல்சேர், சாய் தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரத சாஹு தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளும், கர்ப்பிணி பெண்களும் வரிசையில் செல்ல வேண்டாம், அவர்களுக்கென தனி வரிசையில் சென்று வாக்களிக்கலாம் என தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் அதில் 8 ஆயிரத்து 50 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். வாக்குச்சாவடி மையங்களில் புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்கள் செல்ஃபி பாயிண்ட் உள்ள இடத்தில் மட்டுமே புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை என்றும் தெரிவித்தார். 

Night
Day