காசிமேட்டில் மீன்களின் விலை குறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்து ஒரு கிலோ வஞ்சிரம் 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. புரட்டாசி மூன்றாவது வாரத்தை முன்னிட்டு ஏராளமானோர் விரதம் இருப்பதாலும், மீன்களின் வரத்து அதிகம் காரணமாகவும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 700 ரூபாய்க்கும், கொடுவா 400 ரூபாய்க்கும், சீலா, சங்கரா, கானாங்கத்தை மீன்கள் கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மீன்கள் விலை குறைந்துள்ளதால் அசைவப் பிரியர்கள் மகிழ்ச்சியுடன் தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

Night
Day