தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அத்தியூர் வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அத்தியூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறும். இங்கு பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெறும். விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை விற்பனையாளர்கள், வியாபாரிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று நடந்த வார சந்தையில் ஏராளமான செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்தன. ஆடு ஒன்று 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஒரே நாளில் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...