கள்ளக்குறிச்சி: முதியவர் வயிற்றில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதியவர் வயிற்றில் இருந்த 2 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை அகற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கடலூர் மாவட்டம் ரூபநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  தங்கராசு என்ற முதியவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் முதியவரின் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. தற்போது முதியவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day