கரூரில் 41 பேர் பலி - NDA எம்.பி.க்கள் குழு ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் தவெக பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஹேமமாலினி தலைமையிலான என்.டி.ஏ எம்.பி.க்கள் குழு நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கரூரில் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பதற்காக நடிகையும் எம்பியுமான ஹேமமாலின் தலைமையில் ஒன்பது எம்பிக்கள் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்தார். ஹேமமாலினி தலைமையிலான இந்த குழுவில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிராஜ் லால், ஸ்ரீகாந்த் சிண்டே, அபிரஜிதா சாரங்கி,ரேகா சர்மா புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

இந்த நிலையில் கரூர் வேலுச்சாமி புரத்தில் சம்பவம் நடந்த இடத்தில் ஹேமமாலினி தலைமையிலான என்.டி.ஏ எம்.பி.க்கள் குழு இன்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம், ஜெனரேட்டர் அறை, மரக்கிளை முறிந்த  இடம், கழிவுநீர் கால்வாய்கள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். கூட்ட நெரிசலால் காலனிகளும் உடைமைகளும் சிதறிக் கிடக்கும் இடங்களில் NDA எம்.பி.க்கள் ஆய்வு செய்தனர். அப்போது பெருந்துயர சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நாயினார் நகேந்திரன் விளக்கினார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்த என்டிஏ எம்பிக்கள் குழுவின் தலைவர் ஹேமமாலினி,  பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் விபத்து நிகழ்ந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், உயிரிழந்த 41 நபர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல் கரூரில் கூட்டநெரிசல் சம்பவம் நடந்த பகுதியில் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

varient
Night
Day