கரூரில் 41 பேர் உயிரிழப்பு - தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் பெருந்துயர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள், 18 பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.   

இதனைத் தொடர்ந்து  நேற்று இரவு மதியழகன் மற்றும் தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்த தனிப்படை போலீசார் கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் கரூர் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனிடையே தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவில்,  போலீசார் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் தவெக கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்களையும் செருப்புகளையும் வீசியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் காவல்துறையினர் பணியை முறையாக செய்யவில்லை என்பது தான் என்றும்  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day