கருணாபுரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சின்னம்மா ஆறுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் வீடுகளுக்கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று, உயிரிழந்தோர் உடல்கள் மீது மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்ற கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த மணிகண்டனின் மனைவியை,  புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து ஆறுதல் தெரிவித்த போது, அந்தப் பெண் கதறி அழுதார். இந்த காட்சி, காண்போரின் உள்ளத்தை நெகிழச் செய்தது.

கருணாபுரம் பகுதியில், கொட்டும் மழையில் நனைந்தப்படி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் தெரிவித்தார். 

Night
Day