தமிழகம்
11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிகளை பேருந்தில் ஏற்றாமல், ஓட்டுநர் அலட்சியமாக பேருந்தை ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாழக்குடி பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது பயணிகளை இறக்கி விடுவதற்காக நிறுத்திய அரசு பேருந்தை, பள்ளி மாணவிகளை கண்டதும், ஓட்டுனர் வேகமாக இயக்கி சென்றுள்ளார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. பள்ளி மாணவிகளை பேருந்தில் ஏற்றிச் செல்லாத ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...