தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் அருகே குடத்திற்குள் தலை சிக்கிக் கொண்டு மூச்சுவிட திணறிய நாயை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். புவியூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது வளர்ப்பு நாய், வீட்டிற்கு அருகில் குடத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை அருந்த முயன்றுள்ளது. அப்போது நாயின் தலை கடத்தில் சிக்கிக் கொண்டதால் மூச்சுவிட முடியாமல் திணறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி குடத்தை வெட்டி எடுத்து நாயை பாதுகாப்பாக மீட்டனர். தீயணைப்பு துறையினரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...