தமிழகம்
நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு
அதிக பணி நெருக்கடியை குறைத்திட வலியுறுத்தி நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக?...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் அக்கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நித்திரவிளை அருகே நம்பாளி என்னும் இடத்தில் உயர் கோபுர சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டு, கல்வெட்டு வைக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்தின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்ததாகவும், கொல்லங்கோடு நகராட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பெரோஸ் கான் பெயர் பொறிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினரையும், மாவட்ட செயலாளர் செல்லசாமியையும் கைது செய்ததால், அக்கட்சியினர் அருமனை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிக பணி நெருக்கடியை குறைத்திட வலியுறுத்தி நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக?...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 4 முகமூடி கொள்ளையர் கையில் உருட்டுக் க?...