கனமழை எதிரொலி - தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நெல்லை, சேலம், தென்காசி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். 

இதேபோல் கனமழை எதிரொலியால் திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சை, தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day