கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய மண்ணிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது செல்லத்தக்கதல்ல : கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என தன் இறுதிமூச்சு வரை போராடியவர் புரட்சித்தலைவி அம்மா என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதம்

கச்சத்தீவை தாரை வார்த்த திமுக-காங்கிரஸ் கட்சிகள், இன்றைக்கு அனைத்தையும் மறைத்து விட்டு, தமிழக மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என பகல், கனவு காண்கிறார்கள் - கச்சத்தீவை பற்றி பேச அருகதை இல்லாத திமுகவினர் என்னதான் உண்மையை மூடி மறைக்கப்பார்த்தாலும், தோல்வி அடைவார்கள் என புரட்சித்தாய் சின்னம்மா கருத்து

தமிழக மக்களின் வாழ்வாதார உரிமை சம்பந்தப்பட்ட கச்சத்தீவு விவகாரம் வெறும் தேர்தல் நேரத்திற்கு மட்டும் எடுத்துக்கொள்ளும் பிரச்னை அல்ல - கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்ற புரட்சித்தலைவி அம்மா மேற்கொண்ட முயற்சிகள் என்றைக்கும் வீண் போகாது என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பினையும் உறுதி செய்திடும் வகையில் புதிதாக அமையவுள்ள மத்திய அரசு கச்சத்தீவை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Night
Day