கச்சத்தீவும்... 50 ஆண்டுகளும்... அம்பலமான திமுகவின் கபட நாடகம்...

எழுத்தின் அளவு: அ+ அ-


கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும், கச்சத் தீவை மீட்போம் என காங்கிரஸ்காரரும் திமுகவினரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வருவதாக பாரம்பரிய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக கச்சத்தீவை மீட்போம் என நாடாகமாடி வரும் திமுகவினரின் கபட நாடகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

voice over....

வங்காள விரிகுடாவின், பாக் ஜல சந்தி பகுதியில் இந்தியாவிற்கும்-இலங்கைக்கும் இடையில் கச்சத் தீவு அமைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பில் மத்திய பகுதியில் அமைந்துள்ள கச்சத் தீவு, 1858-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, இங்கிலாந்து ராணி ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டநேரத்தில், கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இலங்கையின் நிலப்பரப்போடு இணைக்கப்படாத கச்சத்தீவுக்கு, 1921-ம் ஆண்டு முதல் முறையாக இலங்கை அரசு சொந்தம் கொண்டாடியது. அன்று தொடங்கி, இந்தியா, இலங்கை இடையில் கச்சத் தீவு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை அவ்வப்போது தலையெடுத்தாலும், நடைமுறையில் கச்சத் தீவை இருநாட்டு மீனவர்களும் பயன்படுத்தி வந்தனர். 

கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது பிரதமராக பதவியேற்ற இந்திராகாந்தி 1974-ம் ஆண்டு கச்சத்தீவை அதிகாரப்பூர்வமாக இலங்கைக்கு தாரை வார்த்தார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன. 

breathe....

அரை நூற்றாண்டு கடந்த கச்சத்தீவு சர்ச்சை தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இருநாட்டு மீனவர்களும் தொழிலில் ஈடுபடும் போது வளைவுகளை உலர வைக்கவும்,  ஓய்வு எடுக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த நடைமுறையை இலங்கை அரசு பின்பற்றவில்லை என்றே கூறலாம்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது மாநிலத்தில் ஆண்ட திமுக அரசு இதுவரையிலும் கச்சத் தீவை மீட்போம் என்று தேர்தல் வரும்போதெல்லாம் வாக்குறுதியாக கொடுத்து வருகின்றன. தற்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து 50 ஆண்டுகளான நிலையிலும், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மீனவர்களை வஞ்சிக்கும் போக்கை கையாண்டது வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

byte ....


திமுகவின் இந்த கபட நாடகத்தால், ராமநாதபுரம் மட்டுமின்றி புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும்,  அவர்களது படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இதுவரை கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 550 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளதாக குற்றம்சாட்டும் மீனவர்கள், தேர்தல் வரும்போது மட்டும் கச்சத்தீவை மீட்போம் என திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மீனவர்களை வஞ்சிப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளாக கச்சத்தீவை மீட்போம் என்ற வாக்குறுதியை மட்டுமே அளித்து வரும் திமுகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

Night
Day