ஓடும் ரயிலில் ஆபாச செய்கை... தக்க பாடம் புகட்டிய பெண் பட்டிமன்ற பேச்சாளர்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஓடும் ரயிலில் தனியாக இருந்த பட்டிமன்ற பெண் பேச்சாளரிடம்  போதை ஆசாமி ஆபாச செய்கையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிக்கு தக்க பாடம் புகட்டிய பட்டிமன்ற பெண் பேச்சாளரின்  துணிச்சலான செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண் பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர், காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக பெங்களூர் செல்லக்கூடிய ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயிலில் அதிகம் கூட்டமில்லாத நிலையில், அவர் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த போதை ஆசாமி ஒருவர் பெண் தனியாக இருந்ததை தனக்கு சாதகமாக பயண்படுத்திக் கொண்டு, அவர் முன்பு எழுந்து நின்று ஆடையை அவிழ்த்து ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பட்டிமன்ற பேச்சாளர், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். உடனடியாக அங்கு வந்த அதிகாரிகளிடம் நடந்ததை பற்றி தெரிவித்தார். அதன் பிறகு அதிகாரிகள், போதை ஆசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, தெரியாமல் நடந்துவிட்டது மன்னித்துவிடுங்கள் என கதறியுள்ளார்.

இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் சக பயணிகள் அவரை பிடித்து நெய்வேலியில் உள்ள ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள பெண் பட்டிமன்ற பேச்சாளர் , ரயிலில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பெண்கள் துணிச்சலோடு புகார் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் இதனை குறைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரித்துள்ளனர். 

Night
Day